Posts

Showing posts with the label # | #Lsquo | #Kumbalangi | #Nights

‘கும்பளங்கி நைட்ஸ்’ நடிகை அம்பிகா ராவ் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்1459101515

Image
‘கும்பளங்கி நைட்ஸ்’ நடிகை அம்பிகா ராவ் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம் மலையாள நடிகை அம்பிகா ராவ் மாரடைப்பால் காலமானார். மலையாள நடிகையும், உதவி இயக்குனருமான அம்பிகா ராவ், ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 58. அறிக்கையின்படி, எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரவு 10.30 மணியளவில் அம்பிகா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அம்பிகா ராவ், பாலச்சந்திர மேனன் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளியான ‘கிருஷ்ண கோபாலகிருஷ்ணா’ படத்தின் மூலம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்தார். சுமார் இரண்டு தசாப்தங்களாக பொழுதுபோக்கு துறையில் பணிபுரிந்து வந்த இவர், மம்முட்டி நடித்த ‘ராஜமாணிக்யம்’, ‘தொம்மனும் மக்களும்’ மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘வெள்ளினக்ஷத்திரம்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். திலீப் நடித்த பிளாக்பஸ்டர் படமான ‘மீஷா மாதவன்’, ‘சால்ட் அண்ட் பெப்பர்’, சமீபத்தில் வெளியான ‘அனுராகா காரிக்கின் வெல்லம்’,