Posts

Showing posts with the label #Election | #President | #Lanka | #Voting

இலங்கை அதிபர் தேர்தல்!! நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு!!976283433

Image
இலங்கை அதிபர் தேர்தல்!! நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு!! பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் மக்கள் புரட்சியை அடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். இந்நிலையில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கானத் தோ்தல், இன்று நடைபெறவுள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செவ்வாய் கிழமை நடைபெற்றது. முன்னதாக அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்தார். தான் நேசிக்கும் நாடு மற்றும் மக்களின் நலனுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக அவர் டிவிட்டரில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரேமதாசா, தல்லாஸ் அலகப்பெருமாவை அதிபர் பதவிக்கு முன்னிறுத்துவதாக அறிவித்தார். பிரேமதாசா விலகலை தொடர்ந்து இடைக்கால அதிபா் ரணில் விக்ரமசிங்க, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவா் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து வந்துள்ள தல...