ரூ. 5 கோடி பணத்தை தராமல் ஏமாத்திட்டாரு.. நடிகர் விமல் மீது பண மோசடி புகார் அளித்த தயாரிப்பாளர்! அரசு பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திரைத் துறையில் ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர் கோபி என்பவர், கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி நடிகர் விமல் தன்னை அணுகி மன்னர் வகையறா என்ற திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அதில் தானே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் அதற்கு பணம் கொடுத்து உதவும்படி தன்னிடம் கூறினார். அந்த படத்திற்காக வாங்கிய தொகையை இத்தனை ஆண்டுகள் ஆகியும் தராமல் மோசடி செய்து வருகிறார் என புகார் அளித்துள்ளார். ஆரம்பத்தில் அவர் தயங்கவே படம் நல்ல கதையம்சம் கொண்டுள்ளதாகவும் மேலும் களவாணி 2 படத்தை அவர் பேனரில் தயாரிக்க உத்தரவாதம் அளித்ததன் பேரில் அவருக்கு வங்கி கணக்கிலும் தொகையாக ரூபாய் 5 கோடியும் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். 28-12-2014 அன்று அக்ரிமென்ட் போடப்பட்டது என்றும் மேலும் வாய்மொழியாக நெகட்டிவ் ரைட் கொடுப்பதற்காக நம்பிக்கை ஊட்டியதன் பேரில் அவருக்கு பணத்தை கொடுத்தேன் என தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். படம் வெளியான பிறகு நன்கு லாபத்தை ஈட்டிய நிலையில், தன்ன...