ரூ. 5 கோடி பணத்தை தராமல் ஏமாத்திட்டாரு.. நடிகர் விமல் மீது பண மோசடி புகார் அளித்த தயாரிப்பாளர்!
ரூ. 5 கோடி பணத்தை தராமல் ஏமாத்திட்டாரு.. நடிகர் விமல் மீது பண மோசடி புகார் அளித்த தயாரிப்பாளர்!
அரசு பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திரைத் துறையில் ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர் கோபி என்பவர், கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி நடிகர் விமல் தன்னை அணுகி மன்னர் வகையறா என்ற திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அதில் தானே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் அதற்கு பணம் கொடுத்து உதவும்படி தன்னிடம் கூறினார். அந்த படத்திற்காக வாங்கிய தொகையை இத்தனை ஆண்டுகள் ஆகியும் தராமல் மோசடி செய்து வருகிறார் என புகார் அளித்துள்ளார்.
ஆரம்பத்தில் அவர் தயங்கவே படம் நல்ல கதையம்சம் கொண்டுள்ளதாகவும் மேலும் களவாணி 2 படத்தை அவர் பேனரில் தயாரிக்க உத்தரவாதம் அளித்ததன் பேரில் அவருக்கு வங்கி கணக்கிலும் தொகையாக ரூபாய் 5 கோடியும் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். 28-12-2014 அன்று அக்ரிமென்ட் போடப்பட்டது என்றும் மேலும் வாய்மொழியாக நெகட்டிவ் ரைட் கொடுப்பதற்காக நம்பிக்கை ஊட்டியதன் பேரில் அவருக்கு பணத்தை கொடுத்தேன் என தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
படம் வெளியான பிறகு நன்கு லாபத்தை ஈட்டிய நிலையில், தன்னிடம் வாங்கிய தொகையை திருப்பித் தராமல் தன்னை மோசடி செய்து விட்டார் விமல் என்றும் அதன் பிறகு பணம் தராமல் காலம் தாழ்த்தி தன்னை ஏமாற்றி வந்ததன் பேரில் பின்பு பலமுறை பேச்சுவார்த்தைக்கு பிறகு தொலைக்காட்சி உரிமம் பெற்ற வகையில் ரூபாய் ஒரு கோடியே 30 லட்சம் மட்டும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக கூறினார்.
6 மாதத்திற்கு பிறகு அசல் தொகையான ரூபாய் 5 கோடியைத் திருப்பித் தருவதாக கூறியதால் தான் சட்டப்படி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அதன்பிறகு பல்வேறு காரணங்களை கூறி பணம் கொடுப்பதில் காலதாமதம் செய்து வந்தார் பின்பு பின்பு கொரானா தொற்று பாதிப்பு ஏற்படவே சினிமாத்துறை முடங்கி விட்டதால் சினிமாத்துறை முழுவதுமாக இயங்கவில்லை. அதனால் பணத்தை கொடுக்க முடியவில்லை என்றும் மேலும் சிறிது காலம் பொறுத்துக் கொள்ளுமாறு கூறினார் நான் அவரின் வார்த்தையை நம்பி நான் வேறு எந்த சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
இந்நிலையில் பொய்யான காரணங்களைக் கூறி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தன் மீது நடிகர் விமல் புகார் கொடுத்தார். என்றும், அந்த புகாருக்கு முன்ஜாமீன் ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் போது எங்களிடம் பேச்சுவார்த்தை ஏற்பட்டு அந்த பேச்சுவார்த்தையில் ரூபாய் 3 கோடி தருவதாக நடிகர் விமல் ஒப்புக் கொண்டு எழுத்துப்பூர்வமாக பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் இன்றைய தேதிவரை ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் என்னை மோசடி செய்து ஏமாற்றி வருகிறார் விமல் என பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
மேலும் தற்பொழுது சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பல கோடி ரூபாய் முன் தொகையாக வாங்கிய பிறகும் என்னிடம் ஒப்புக்கொண்ட தொகையைக் கூட கொடுக்காமல் என்னை நம்பிக்கை மோசடி செய்து என்னை ஏமாற்றி வருகிறார். மேலும், நடிகர் விமல் இதுபோல பல பேரிடம் மோசடி செய்ததாக தெரிய வந்துள்ளது. நான் அவரை அணுகி பணத்தை கேட்டபோது என்னிடம் பணத்தை திருப்பித் தராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை விமல் மீது தயாரிப்பாளர் கோபி முன் வைத்துள்ளார். இது தொடர்பான விசாரணையை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். இதற்கு, நடிகர் விமல் என்ன பதில் தரப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Comments
Post a Comment