Posts

Showing posts with the label #Migration | #Talawadi | #Karnataka | #Forest

தாளவாடி பகுதியில் புலி நடமாட்டம்: தமிழக, கர்நாடக வனத்துறை அதிகாரிகள் குழு கண்காணிப்பு1315581522

Image
தாளவாடி பகுதியில் புலி நடமாட்டம்: தமிழக, கர்நாடக வனத்துறை அதிகாரிகள் குழு கண்காணிப்பு சத்தியமங்கலம்: தாளவாடி பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதால் தமிழக, கர்நாடக மாநில வனத்துறையை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரகத்தை ஒட்டியுள்ள சேஷன் நகர் கிராமப் பகுதியில் கடந்த 2 வாரங்களாக கர்நாடக மாநிலம் காப்புக்காட்டிலிருந்து வெளியே வந்த புலி அப்பகுதியில் விவசாய விளை நிலங்களில் மேய்ந்த பசுமாடுகளை வேட்டையாடியது. இது வரை 3 பசுமாடுகள் புலி தாக்கி இறந்துள்ளன. விவசாயம் செய்யாமல் தரிசு நிலமாக முட்புதர்கள் அதிகமுள்ள தனியார் நபர்களின் பட்டா நிலங்களில் புலி மறைந்திருந்து வேட்டையாடி வருவதை தாளவாடி வனச்சரக அலுவலக பணியாளர்கள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி விபரங்களை சேகரித்தனர். இதையடுத்து ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குநர் தேவேந்திர குமார் மீனா உத்திரவின் பேரில் பசு மாடுகளை இழந்த 3 விவசாயிகளுக்கும் வனத்துறையினால் இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் அங்கிருந்து புலியை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் திருப்பி அனுப்ப தமிழக