வீட்டின் ஏசிக்குள் புகுந்திருந்த சுமார் 3 அடி நீள சாரைப்பாம்பு...!1721028849
வீட்டின் ஏசிக்குள் புகுந்திருந்த சுமார் 3 அடி நீள சாரைப்பாம்பு...! வீட்டின் ஏசிக்குள் புகுந்திருந்த சுமார் 3 அடி நீள சாரைப்பாம்பு...! கடலூரில் வீட்டின் ஏசிக்குள் புகுந்திருந்த சாரைப்பாம்பு பத்திரமாக பிடித்து அகற்றப்பட்டது. செம்மண்டலம் பகுதியில் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஏசிக்குள்ளிருந்து சத்தம் வந்ததுடன், பாம்பு தோல் உரித்ததற்கான அடையாளங்களும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஏசி மெக்கானிக் மற்றும் பாம்பு பிடி வீரர் செல்லாவை வரவழைத்து ஏசியை கழற்றி பார்த்த போது உள்ளே சாரைப்பாம்பு இருந்தது. பின்னர் செல்லா பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். இது குறித்து பாம்பு பிடி வீரர் செல்லா, "ஏசிக்கு வெளியே அவுட்டோர் யூனிட்டிலிருந்து பைப் லைன் அமைக்கப் போடப்பட்டிருக்கும் ஓட்டை அடைக்காமல் விடப்பட்டிருந்ததால் அதன் வழியாக பாம்பு புகுந்திருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.