எம்.இ.,எம்.டெக். முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்1917104664
எம்.இ.,எம்.டெக். முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை சேர்க்கைக்கான விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்குகிறது. 2022-2023 கல்வி ஆண்டில் சேருவதற்கான எம். இ., எம்.டெக்.,போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும், எம்.அர்ச்., முதுநிலை படிப்புக்குமான தமிழ்நாடு பொது நுழைவு சேர்க்கை (TANCA) நடத்தப்படுகிறது. 2022 தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அல்லது கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். முக்கியமான நாட்கள்: இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய: ஆரம்ப நாள் : 03.07.2022 இறுதி நாள் : 03.08.2022 https://tanca.annauniv.edu/tanca22/ என்ற இணைய தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்/முடியும். தகுதிகள்: 2022 தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (TANCET) பெற்ற மதிப்பெண்கள். (அல்லது) 2020/21/22 ஆகிய ஆண்டுகளில் தொடர்பு