கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை கைது செய்தது சிபிஐ கடந்த 2009-2014ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சீனாவைச் சேர்ந்த 263 பேருக்கு விசா வழங்கியதில் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடு உட்பட 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கடந்த 2009-2014-ல் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது பஞ்சாப் மாநிலத்தில் தால்வாண்டி சாபோ மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பஞ்சாபின் மான்சா நகரில் அமைக்கப்பட்ட இந்த 1,980 மெகாவாட் திறனுடைய மின்திட்டமானது, சீனாவைச் சேர்ந்த ஷான்டாங் எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்டிரக்சன் கார்ப் என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அங்கே, மின் திட்டத்தைக் செயல்படுத்த தாமதம் ஏற்பட்டது. இதனால் சீனாவிலிருந்து சீன தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டுவர அந்த நிறுவனம் முயற்சித்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த உச்ச வரம்புக்கு மேல் விசாக்கள் தேவ