ரத்த சிவப்பு நிலா.. நாளை நிகழும் சந்திர கிரகணம்!!
ரத்த சிவப்பு நிலா.. நாளை நிகழும் சந்திர கிரகணம்!!
நாளை சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் நிழலில் முழு நிலவு மறந்து விலகும் நிகழ்வு தான் முழு சந்திர கிரகணம் எனப்படுகிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சீரமைக்கும்போது சந்திர கிரகணம் நிகழும். இந்த சந்திர கிரகணத்தில் நிலவு செந்நிறத்தில் காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.
முழு சந்திரனும் பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் விழுவது அம்ப்ரா என்று அழைக்கப்படுகிறது. அம்ப்ராவிற்குள் சந்திரன் இருக்கும்போது, அது சிவப்பு நிறத்தைப் பெற்று ரத்த-சிவப்பு தோற்றத்தை காணும் அரிய வாய்ப்பைத் தருகிறது.
சந்திர கிரகணத்தின் போது, சந்திரனை அடையும் ஒரே சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்கிறது. பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்ட சிவப்பு நிறம் நிலவில் பட்டு ஒளிர்வதால் நிலவு சிவப்பாக தெரிகிறது.
கிரகணத்தின் போது பூமியின் நிழலை நிலவில் பதிக்கும் நிலைகளை மூன்று கட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது:
அம்ப்ரா-இது இருண்ட, மையப் பகுதியைக் குறிக்கும்
பெனும்ப்ரா - எனப்படும் வெளிப்புற பகுதி மற்றும்
அனப்பிரா - அம்ப்ராவுக்கு அப்பால் உள்ள நிழலாடிய பகுதி.
வட/கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பகுதி, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் இந்த கிரகணம் தெரியும்.
இந்தியாவின் பெரும்பகுதியில் கிரகணம் தெரியாது என்றாலும், கொல்கத்தா போன்ற கிழக்கு பகுதிகளில் மட்டுமே இதன் இறுதி நிலைக்களைக் காணலாம். கொல்கத்தாவில் சந்திரன், கிழக்கு அடிவானத்தில் இருந்து மாலை 4.52 மணிக்கு உதயமாகும் என்று கணக்கிடப்படுகிறது. மேகமூட்டம் இல்லாமல் இருந்து வானத்தின் வெளிச்சம் குறைந்தால் 5.11 மணி வரை நிகழும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க வாய்ப்புள்ளது. சந்திர கிரகணம் முடியும் பிற்பகுதியை இந்தியாவின் கிழக்கு பகுதி மக்கள் காணமுடியும் .
அடுத்த முழு சந்திர கிரகணம் மார்ச் 14, 2025 அன்று நிகழும் என்றும், ஒரு பகுதி சந்திர கிரகணம் அடுத்த அக்டோபர் 2023-ல் நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment