ரத்த சிவப்பு நிலா.. நாளை நிகழும் சந்திர கிரகணம்!! நாளை சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் நிழலில் முழு நிலவு மறந்து விலகும் நிகழ்வு தான் முழு சந்திர கிரகணம் எனப்படுகிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சீரமைக்கும்போது சந்திர கிரகணம் நிகழும். இந்த சந்திர கிரகணத்தில் நிலவு செந்நிறத்தில் காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. முழு சந்திரனும் பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் விழுவது அம்ப்ரா என்று அழைக்கப்படுகிறது. அம்ப்ராவிற்குள் சந்திரன் இருக்கும்போது, அது சிவப்பு நிறத்தைப் பெற்று ரத்த-சிவப்பு தோற்றத்தை காணும் அரிய வாய்ப்பைத் தருகிறது. சந்திர கிரகணத்தின் போது, சந்திரனை அடையும் ஒரே சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்கிறது. பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்ட சிவப்பு நிறம் நிலவில் பட்டு ஒளிர்வதால் நிலவு சிவப்பாக தெரிகிறது. கிரகணத்தின் போது பூமியின் நிழலை நிலவில் பதிக்கும் நிலைகளை மூன்று கட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது: அம்ப்ரா-இது இருண்ட, மையப் பகுதியைக் குறிக்கும் பெனும்ப்ரா - எனப்படும் வெளிப்புற ...
கொரோனாவின் மூன்று அலைகள் ஓய்ந்திருக்கின்றன. இதனால் மக்கள் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றனர். இருப்பினும் முகக்கவசம் அணிவது அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது. இந்தச் சூழலில் இந்தியாவில் சராசரி கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 247ஐ விட அதிகமாகும். இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும்... விரிவாக படிக்க >>
ரஜினி, கமல் பட நடிகர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்! கமலின் 'சலங்கை ஒலி' 'சிப்பிக்குள் முத்து', 'சங்கராபரணம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.விஸ்வநாத், குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்து தனி முத்திரை படைத்தவர். பத்ம ஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி குவித்த அவர் இன்று காலமானார். அவரது மறைவிற்கு #RipLegend என்ற ஹேஷ்டேக் உடன் ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவிக்கின்றனர். தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தமிழ், இந்தி மொழிகளில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் கே.விஸ்வநாத். இவர் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து திரைப்படங்களை எடுத்து வெற்றி அடைந்தார். இவர் முதன்முதலாக 1965 ஆம் ஆண்டு அக்னேனி நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளியான ‘ஆத்ம கௌரவம்’ என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் பெரும் வெற்றி அடைந்ததால் தெலுங்கு துறையில் கவனிக்கத்தக்க இயக்குனராக வளர்ந்தார் கே.விஸ்வநாதன். ஏராளமான படங்களை இயக்கி சாதனைபடைத்துள்ளார். விஸ்வ...
Comments
Post a Comment