சிறுமியின் தலையை துண்டித்து பூஜை - நள்ளிரவில் மயானத்தில் மாந்திரீகம் - மந்திரவாதிகளின் அட்டூழியம்1545857433


சிறுமியின் தலையை துண்டித்து பூஜை - நள்ளிரவில் மயானத்தில் மாந்திரீகம் - மந்திரவாதிகளின் அட்டூழியம்


சித்திரவாடியில் உள்ள மயானத்தில் 10 நாள்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி பூஜை செய்து தலையை மட்டும் தனியாக எடுத்துச் சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்பட்டுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம் சித்திரவாடியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு 12 வயதில் கிருத்திகா என்ற மகள் இருந்துள்ளார். அரசுப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த கிருத்திகா அக்டோபர் 5-ம் தேதி வீட்டின் எதிரே சிறுமிகளுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது தெருவிளக்கை மாற்றுவதற்காக வந்த கலைச்செல்வன் என்பவர் மின்கம்பத்தில் ஏறியுள்ளார். மின்கம்பம் சேதமடைந்து மோசமான நிலையில் இருந்ததால் அதன் அடிப்பகுதி முறிந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கிருத்திகாவின் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த கிருத்திகா சிகிச்சைகாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டார்.

 

இதனையடுத்து சிறுமி மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஒருவாரத்துக்கு மேல் சிகிச்சையில் இருந்த சிறுமி கடந்த 14-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து 15-ம் தேதி சிறுமியின் உடல் சித்திரவாடியில் உள்ள மயானத்தில் உடல் புதைக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog