திருவள்ளூர், சோழவரம், ஊத்துக்கோட்டையில் ரூ3 கோடி மதிப்புள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு: வருவாய்த் துறையினர் நடவடிக்கை



புழல்: சோழவரம் ஒன்றியம் பண்டிகாவனூர் கிராமத்தில், ஆறு, ஏரி, குளம் ஆகிய நீர்நிலைகளில் சுமார் 50 ஏக்கர் நிலத்தை  தனியார் சிலர் ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக விவசாயம் செய்தனர். இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்தது. இதுபடறடிற கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், பொன்னேரி ஆர்டிஓ பரமேஸ்வரி (பொறுப்பு) ஆகியோருக்கு தொடர்ந்து புகார்கள் ெசன்றன. இந்நிலையில், பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த், சம்பவ இடத்துக்கு சென்று நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது சுமார் ₹3 கோடி மதிப்பிலான 50 ஏக்கர் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்வது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள், அரசு நிலத்தை அதிரடியாக மீட்டு, அங்கு யாரும் ஆக்கிமிப்பு செய்யக்கூடாது. தவறும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைத்தனர்....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog