போலி நகையை அடகு வைத்து மோசடி துணை நடிகை மீது போலீசில் புகார்


போலி நகையை அடகு வைத்து மோசடி துணை நடிகை மீது போலீசில் புகார்


விருகம்பாக்கம்-போலி நகையை அடக்கு வைத்து, மோசடியில் ஈடுபட்டதாக, துணை நடிகை மீது, அவருடன் பணியாற்றும் துணை நடிகர் போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை, வடபழனி நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் 43; சினிமா துணை நடிகர். இவருடன் பணிபுரியும் துணை நடிகையான சலோமியா என்பவர், ரமேஷை தொடர்பு கொண்டு, தன் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்றும் பணம் தேவையுள்ளதால், தனது நகைகளை அடக்கு வைத்து பணம் பெற்றுத்தரும்படி கேட்டுள்ளார்.இதையடுத்து, சலோமியா கொடுத்த நகைகளை, சாலிகிராமத்தில் தனக்கு தெரிந்த அடகு கடையில் அடகு வைத்த ரமேஷ், அதற்கு ஈடாக, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று கொடுத்தார். இந்நிலையில், அடகு கடை உரிமையாளர், ரமேஷை தொடர்பு கொண்டு, அவர் அடகு வைத்த நகைககள் போலியானவை என்றும், உடனடியாக பணத்தை திரும்ப செலுத்திவிட்டு, போலி நகைகளை திரும்ப பெற்றுச் செல்லும்படி கூறினார்.அதிர்ச்சி அடைந்த ரமேஷ், சலோமியாவை போனில் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கூறினார். பணத்தை திருப்பித் தந்து நகைகளை பெற்றுக் கொள்வதாக கூறிய சலோமியா, அதன் பின், ரமேஷை தொடர்பு கொள்ளததுடன், அவரது அழைப்பை ஏற்கவும் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். இது குறித்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog