திருநங்கையர்களுக்கு இலவச சீட்: சென்னை பல்.கழகம் முடிவு…!


திருநங்கையர்களுக்கு இலவச சீட்: சென்னை பல்.கழகம் முடிவு…!


சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 131 கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு தலா ஒரு இடங்கள் இலவசமாக ஒதுக்கப்படும் என என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு கல்லூரியிலும் திருநங்கையருக்கு இளங்கலை பட்டப்படிப்பில் ஒரு இலவச சீட் வழங்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருக்கக் கூடிய 131 கல்லூரிகளிலும் தலா ஒரு இடங்கள் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்படும்.இந்த நடைமுறை வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.

Tags:

Comments

Popular posts from this blog