ரேஷன் கார்டுதாரர்களுக்கு பெரும் நிம்மதி.. கால அவகாசம் நீட்டிப்பு!
ரேஷன் கார்டுதாரர்களுக்கு பெரும் நிம்மதி.. கால அவகாசம் நீட்டிப்பு!
அந்த வகையில் ரேஷன் கார்டில் சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. அதற்கான கால அவகாசமும் பலமுறை நீட்டிக்கட்டு வந்தது. கடைசியாக வெளியாகியிருந்த அறிவிப்பில் மார்ச் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் நிறைவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நிறையப் பேர் இவற்றை இணைக்காமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது, ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிம்மதி தரும் விதமாக, ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த கால அவகாசம் வழங்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இப்படியொரு வசதி! இருக்கும் இடத்திலேயே எல்லாம் கிடைக்கும்!
2019ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதமே ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால் அனைத்து மாநிலங்களும் இவற்றைச் செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து வாழும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
Comments
Post a Comment