இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற ராதிகா
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற ராதிகா
நடிகவேள் எம்.ஆர். ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். லண்டனில் தனது படிப்பை முடித்த அவரை பாரதிராஜா திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். கதாநாயகி, குணச்சித்திர வேடம் என எதுவாக இருந்தாலும் நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியவர் ராதிகா.
சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் மிகப்பெரிய ரவுண்ட் வந்தவர். தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார்.
மேலும் படிக்க | நான் உன்னை நீங்க மாட்டேன்... மோடியை புகழ்ந்த பிறகு இளையராஜா பாடிய பாடல்
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளா ராதிகா சரத்குமார், “இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறியுள்ளார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகின்றனர்.
மேலும் படிக்க | படத்துக்காக காத்திருக்கும் ஜாண்டி ரோட்ஸ்... நன்றி சொன்ன சூர்யா
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
Comments
Post a Comment