ஸ்விகி, சோமேட்டோ செயலிகள் முடங்கியது
ஸ்விகி, சோமேட்டோ செயலிகள் முடங்கியது
நாடு முழுவதும் உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி, சொமேட்டோவின் செயலிகள் முடங்கியதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
பிரபல முன்னணி ஆன்லைன் உணவு விநியோக செயலிகள் மூலம் லட்சக்கணக்கானோர் உணவு வாங்கிச் சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழில்நுட்பக் காரணத்தால் நாடு முழுவதும் ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ செயலிகள் கடந்த சில நிமிடங்களாக முடங்கியுள்ளன.
இதனால், உணவு வாங்க முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் இதுவரை வெளியிடவில்லை.
Comments
Post a Comment