குவார்ட்டருக்கு ரூ.10 கூடுதலாக வசூல்.. டாஸ்மாக் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட திமுக எம்.எல்.ஏ.


குவார்ட்டருக்கு ரூ.10 கூடுதலாக வசூல்.. டாஸ்மாக் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட திமுக எம்.எல்.ஏ.


திருவள்ளூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு செய்தார்.  அப்போது, குவாட்டர்  ஒன்றுக்கு கூடுதலாக  10 ரூபாய்  வசூலிக்கப்படுவது குறித்து ஊழியர்களிடம் கேட்டு  எச்சரிக்கும் வீடியோ தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் குவாட்டர் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என தனது கிடைத்த  புகாரையடுத்து திமுகவினர் புடை சூழ ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும்  திருவள்ளூர் திமுக சட்டமன்ற உறுப்பினர்  வி.ஜி.ராஜேந்திரன் ஆய்வு செய்தார். கடை ஒன்றுக்கு 10,000 ரூபாய் கூடுதல் கல்லா கட்டும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மணவாள நகர், புட்லூர், காக்களூர், ஈக்காடு ஆகிய இடங்களில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகளில் குவாட்டர் ஒன்றுக்கு கூடுதலாக ரூபாய் 10 வசூலிக்க படுவதாக மதுபிரியர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து திமுகவினர் உடன் சென்று திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன்  டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது திருவள்ளூரில் பேருந்து நிலையம் அருகே அமைந்த டாஸ்மாக் மதுபானக் கடையில் விசாரித்த எம்.எல்.ஏ குவாட்டர் ஒன்றுக்கு  பத்து ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்ற தகவலை  கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஒவ்வொரு கடையிலும் 10,000 ரூபாய் அளவிற்கு கூடுதலாக இதுபோல கட்டணம் வசூலிக்கப்பட்டு கடையில் பணியாற்றும் ஊழியர்கள், சூப்பர்வைசர்கள் மற்றும் டாஸ்மாக் மண்டல மேலாளர் வரை கப்பம் கட்டி வருவதாக தெரிய வந்ததும் எம்.எல்.ஏ  வி.ஜி ராஜேந்திரன் அதிர்ந்து போனார்.

ALSO READ | ரேஷன் கடையில் எடையில் யாரும் ஏமாற்ற முடியாது.. அரிசி, சர்க்கரை இனி பாக்கெட்டில் தான் டெலிவரி!

இதுகுறித்து உடனடியாக டாஸ்மாக் மண்டல அலுவலரிடம் விசாரணை செய்து தடுத்து நிறுத்தாவிட்டால் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். மதுபிரியர்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் டாஸ்மாக் கடையை சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தியது டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள் இடையே தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் டாஸ்மாக் கடைகளில் நடத்திய அதிரடி சோதனை டாஸ்மாக் ஊழியர்கள்  அலுவலர்களிடமும் அவர் உரையாற்றியது வாட்ஸ்அப் , ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : பார்த்தசாரதி

Comments

Popular posts from this blog