அஜித் – விக்னேஷ் சிவன் இணையும் AK 62 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா.? வெளிவந்த தகவல்.
அஜித் – விக்னேஷ் சிவன் இணையும் AK 62 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா.? வெளிவந்த தகவல்.
நடிகர் அஜித்குமார் தொடர்ந்து அடுத்தடுத்த படத்திற்கான இயக்குனர்களை தேர்வு செய்து கமிட்டாகி நடித்து வருகிறார். வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹச். வினோத்துடன் கை கோர்த்து தனது 61வது திரைப்படத்தில் முழுவீச்சில் நடித்து வருகிறார்.
அஜித்தின் இந்த படத்தின் படப்பிடிப்புகள் 32 நாட்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்திற்காக சுமார் 15 கிலோவிலிருந்து 20 கிலோ உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார் எனவும் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
அஜித்தின் 61வது திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என போனிகபூர் அதிரடியாக கூறி உள்ளதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர் இது இப்படி இருக்க இன்னொரு சந்தோஷத்தையும் தற்போது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளனர் இந்த படத்தை தொடர்ந்து உடனடியாக நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து..
தனது 62வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இதற்கான கதையை தான் விக்னேஷ் சிவன் உருவாக்கி வருகிறாராம் கதையை எழுதிவிட்டு சிறந்த நடிகர் நடிகைகளை வைத்து படம் இயக்க உள்ளார் என அண்மையில் கூறினார் இப்படி இருக்கின்ற நிலையில் AK 62 எப்பொழுது ரிலீஸாகும் என்பது குறித்தும் தகவல் கிடைத்துள்ளது.
அதாவது அக்டோபர் மாதம் படத்தின் சூட்டிங் துவங்கும் என்றும் தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பை ஒரே வீச்சில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் அனைத்து பணிகளையும் முடித்து வருகின்ற 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் AK 62வது திரைப்படம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
Comments
Post a Comment