அரசு பேருந்திற்குள் மழை... குடை பிடித்தபடி பயணம் செய்யும் பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ


அரசு பேருந்திற்குள் மழை... குடை பிடித்தபடி பயணம் செய்யும் பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ


கன்னியாகுமரியில் தொடரும் மழை காரணமாக அரசு பேருந்தில் பயணிகள் பேருந்திற்குள்ளேயே குடைபிடித்தபடி பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பயணிகளுக்காக பல்வேறு வழிதடங்களில்  சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் நாற்பது சதவீதத்திற்கும் மேலான பேருந்துகள் பழைய பேருந்துகள் என்பதால் ஓட்டை உடைசல்களுடன் பல்வேறு பகுதிகளில் பழுதடைந்து காணப்படுகிறது.

இதனிடையே கன்னியாகுமரியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் ஓட்டை உடைசல் பேருந்துகளில் நேராக பேருந்திற்கு உள்ளேயே மழை நீர் செல்கிறது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

 


இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கிராமபுற உள்ளூர் பேருந்தில் மழை பெய்து, மழைநீர் பேருந்திற்குள் வந்து உடலில் தண்ணீர் கொட்டியதால் குடை பிடித்தபடியே பயணிக்கும் பயணிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments

Popular posts from this blog