ஏற்காடு சென்ற வருண்.. சத்யாவையும், மல்லிகாவையும் கொலை செய்ய துடிக்கும் கதம்பரி.! இன்றைய எபிசோட்..


ஏற்காடு சென்ற வருண்.. சத்யாவையும், மல்லிகாவையும் கொலை செய்ய துடிக்கும் கதம்பரி.! இன்றைய எபிசோட்..


விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்களை  அறிமுகப்படுத்தி வருகின்றார்கள். மேலும் முதல் சீசன் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டால் இரண்டாவது சீசன் ஒளிபரப்புவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில்  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அறிமுகமான சில காலத்திலேயே டிஆர்பி-யில்  இடத்தை பிடித்தது.

ஒரே வீட்டில் மருமகள்கலாகா சத்யா மற்றும் சுருதி வாழ்ந்துவருகிறார்கள். தனது அம்மா காதம்பரி போலவே சுருதியும் சத்தியாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பல முயற்சிகளை செய்து வந்த நிலையில் வருணிடம் தருணும் சத்யாவும் காதலித்தார்கள்,  இப்படிப்பட்ட நிலையில்தான் நீங்கள் சத்யாவை திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

சத்யா சொல்வதை வருண் நம்பாத காரணத்தினால் சத்யா வீட்டை விட்டு வெளியேறி போலீஸ் ஒருவரின் வீட்டில் அவளின் குழந்தையை பார்க்கும் பணியை செய்து வந்தாள்.  பிறகு அங்கும் அந்த குழந்தையை கடத்தி ஸ்ருதி சசி திட்டம் செய்ததால் அங்கிருந்து ஏற்காட்டில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றாள்.

இப்படிப்பட்ட நிலையில் ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் சத்யா தான் கார்த்தியின் மகள் என்றும் மல்லிகா தான் மனைவி என்றும் தெரியவந்துள்ளது. இதனைப் பற்றி கார்த்தி வருணிடம் கூறியுள்ளார் இப்படிப்பட்ட நிலையில் காதம்பரி சத்யாவயும் மல்லிகாவையும் உயிருடன் விடமாட்டேன் என்று கூறிவிட்டு ஏற்காட்டிற்கு சென்று மல்லிகாவை கழுத்தைப் பிடித்து இருக்கும்பொழுது உடனே சத்தியா கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து மிரட்டுகிறாள்.

பிறகு காதம்பரியும் வீட்டிற்கு வந்து விடுகிறாள்.  இப்படிப்பட்ட இதைப்பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வருண் ஏற்காடு செல்ல இருக்கிறான்.  மேலும் சத்யா பற்றிய சின்ன வயது வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog