RRR நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கும், சத்குருவுக்கும் இப்படி ஒரு கனெக்ஷனா?


RRR நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கும், சத்குருவுக்கும் இப்படி ஒரு கனெக்ஷனா?


இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜூனியர் என்.டி.ஆருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜூனியர் என்.டி.ஆர்.

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வரும், நடிகருமான என்.டி. ராமா ராவின் பேரன் தான் ஜூனியர் என்.டி.ஆர். அவரின் இயற்பெயர் தாரக். பெரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் தன் திறமையால் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். தன் தாத்தா இய்ககிய பிரம்மஸ்ரீ விஸ்வமித்ரா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் ஜூனியர் என்.டி.ஆர். அப்பொழுது. அவருக்கு வயது 10.

என்.டி.ஆர்.

ஜூனியர் என்.டி.ஆருக்கு பிடித்த ஹீரோ தன் தாத்தா என்.டி.ஆர். தான். அவருக்கு பிடித்த நடிகை ஸ்ரீதேவி. பிடித்த ஹாலிவுட் படம் சார்லீஸ் ஏஞ்சல்ஸ் ஆகும்.

யோகா

ஜூனியர் என்.டி.ஆருக்கு யோகா மற்றும் தியானம் மீது அதிக ஈடுபாடு உண்டு. அதற்கு காரணம் சத்குரு தான். சத்குரு வழியை பின்பற்றுபவர்களில் ஒருவர் ஜூனியர் என்.டி.ஆர்.

ராசியான எண்

ஜூனியர் என்.டி.ஆருக்கு ராசியான எண் 9. அவர் வைத்திருக்கும் அனைத்து கார்களின் எண்ணும் 9999. தன்னுடைய பி.எம்.டபுள்யூ 7 சீரீஸ் காருக்கு தன் ராசியான எண்ணை பெற ரூ. 10.5 லட்சம் செலவு செய்தார்.

ஜப்பான்

ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான பாத்ஷா படம் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஜப்பானில் ரிலீஸான முதல் தெலுங்கு படம் பாத்ஷாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog