Vijay:ஒரு உயிர் பறிபோன வேதனையில் எஸ்.ஏ.சி.: விஜய் ரசிகர்கள் ஆறுதல்
Vijay:ஒரு உயிர் பறிபோன வேதனையில் எஸ்.ஏ.சி.: விஜய் ரசிகர்கள் ஆறுதல்
வித்யா இறந்து பல ஆண்டுகள் ஆனபோதிலும் அந்த சம்பவத்தை குடும்பத்தார் யாராலும் இன்னும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. தங்கையை நினைத்து விஜய் வருத்தப்படாத நாளே இல்லை.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் வித்யா இறந்தநாளான இன்று அவரின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியிருப்பதாவது, என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று மே-20 என தெரிவித்துள்ளார்.
எஸ்.ஏ. சந்திரசேகரின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். விஜய் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
உங்களின் வலி புரிகிறது அப்பா. உங்களுக்கு எங்களை போன்று ஏராளமான மகன்கள், மகள்கள் இருக்கிறார்கள். நாங்கள் உங்களை பெயருக்கு அப்பா என்று அழைப்பது இல்லை.
இதுவும் கடந்து போகும். இன்று 37வது நினைவு நாள் ஆகும். எங்களுக்கும் வருத்தமாக உள்ளது. தைரியமாக இருங்க அப்பா என தெரிவித்துள்ளனர்.
எஸ்.ஏ.சி.யை போன்றே விஜய் அண்ணாவும் இன்று வேதனையில் இருப்பார் அல்லவா என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள். விஜய் தற்போது வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கிறது.
Vijay:தெலுங்கானா முதல்வரை சந்தித்த விஜய்: என்னவோ திட்டம் இருக்கு...இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவை சந்தித்து பேசியிருக்கிறார் விஜய்.
Comments
Post a Comment