ரத்த சிவப்பு நிலா.. நாளை நிகழும் சந்திர கிரகணம்!!
ரத்த சிவப்பு நிலா.. நாளை நிகழும் சந்திர கிரகணம்!! நாளை சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் நிழலில் முழு நிலவு மறந்து விலகும் நிகழ்வு தான் முழு சந்திர கிரகணம் எனப்படுகிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சீரமைக்கும்போது சந்திர கிரகணம் நிகழும். இந்த சந்திர கிரகணத்தில் நிலவு செந்நிறத்தில் காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. முழு சந்திரனும் பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் விழுவது அம்ப்ரா என்று அழைக்கப்படுகிறது. அம்ப்ராவிற்குள் சந்திரன் இருக்கும்போது, அது சிவப்பு நிறத்தைப் பெற்று ரத்த-சிவப்பு தோற்றத்தை காணும் அரிய வாய்ப்பைத் தருகிறது. சந்திர கிரகணத்தின் போது, சந்திரனை அடையும் ஒரே சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக செல்கிறது. பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்ட சிவப்பு நிறம் நிலவில் பட்டு ஒளிர்வதால் நிலவு சிவப்பாக தெரிகிறது. கிரகணத்தின் போது பூமியின் நிழலை நிலவில் பதிக்கும் நிலைகளை மூன்று கட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது: அம்ப்ரா-இது இருண்ட, மையப் பகுதியைக் குறிக்கும் பெனும்ப்ரா - எனப்படும் வெளிப்புற ...
Comments
Post a Comment