CSK vs RR Preview: ‘அஸ்வினால்’…தோனிக்கு பெரிய சிக்கல்: பிட்சும் சாதகமில்லை: உத்தேச XI, பிட்ச் ரிப்போர்ட்! ஐபிஎல் 15ஆவது சீசன் 68ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெற்றால்தான் ராஜஸ்தான் அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை உருவாக்க முடியும். சிஎஸ்கே: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த சீசனை கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனால் கடந்த போட்டியில் குஜராத்திற்கு எதிராக ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு ஆகியோருக்கு வாய்ப்புகளை வழங்கவில்லை. மாற்றாக களமிறங்கிய ஜெகதீசன், ஷிவம் துபே போன்றவர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் சொதப்பினார்கள். மேலும் கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே ஒரு பவுண்டரியை கூட அடிக்கவில்லை என்பதுதான் சோகத்திலும் பெரிய சோகம். அஸ்வினால் பிரச்சினை: இதனால், இன்று கடைசி போட்டியில் வெற்றிபெறும் நோக்கில் மீண்டும் மூத்த வீரர்கள் உத்தப்பா, அம்பத்தி ராயுடு ஆகியோரை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால், இந்த இருவர்களுக்கும் எதிராக அஸ்வின் சிறந்த ரெக்கார்ட் வைத்திருப்பதாலும், இன்றைய போ...